உள்ளடக்கல் கல்விக்கான தேசிய மற்றும் சர்வதேச அளவில் முன்வைக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் கட்டளைகள்

மாணவரது சொந்தத் தனித்துவத்தை பாதுகாத்தவாறு அவர்களுக்குப் பொருத்தமான கற்றல் சூழலை பொதுவான வகுப்பறையில் உருவாக்குவதே உட்படுத்தல் கல்வியாகும். மேலும் உள்ளடக்கல் கல்வி (Inclusive Education) என்பது மாற்றுத்திறனாளிகள், மற்றும் புறக்கணிக்கப்பட்ட குழுக்களை உள்ளடக்கியதாகும். சர்வதேச அளவில், உள்ளடக்கல் கல்வி மீதான சட்டங்கள் மற்றும் கட்டளைகள் பல உள்ளன. அவற்றில் முக்கியமான சில விபரங்கள் பின்வருமாறு,

தேசிய ரீதியில் முன்வைக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் கட்டளைகள் (National laws and ordinances for inclusive education)

இலங்கை உள்ளடக்கல் கல்வி சட்டங்கள்
  1. 1997 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தத்தினூடாக இலங்கையின் தேசிய மையக்கலைத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதனுடன் இணைந்ததாக அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணக்கருவே உட்படுத்தல் கல்வியாகும்.
  2. அதே போன்றுஇ 20.04.2016 திகதியிடப்பட்ட 1963/30 ஆம் இலக்க கட்டாயக் கல்வி கட்டளைகள் அடங்கிய விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டாயக் கல்வி கட்டளைகளுக்கமைய 05 வயது முதல் 16 வயது வரையிலான அனைவருக்கும் கல்வி வாய்ப்புகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  3. கென்மோர் அறிக்கையின் பரிந்துரைகளின் பேரில், வித்யோதயா பல்கலைக்கழகத்தில் 28 பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டு விசேட கல்விப் பாடநெறியை நடத்தி, அரச பாடசாலைகளில் விசேட கல்விப் பிரிவுகளை நிறுவி, அங்கு கற்பிப்பதற்குப் பயிற்சி பெற்ற பட்டதாரிகளை ஈடுபடுத்தியதுடன், 1969 ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த கல்வி ஆரம்பிக்கப்பட்டது.
  4. பேராசிரியர் டி.அரம்பத்த அவர்களின் விசேட கல்வி தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகளின்படி 1971 ஆம் ஆண்டு கல்வி அமைச்சில் விசேட கல்விக் கிளை நிறுவப்பட்டது. பின்னர் 70 களில், வட்டாரக் கல்விக் காரியாலய மட்டத்தில் விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட பிள்ளைகள் தொடர்பாகக் கல்விக் கணிப்பீடுகளை மேற்கொள்வதற்கான கணிப்பீட்டுக் குழுக்கள் நிறுவப்பட்டன.
  5. கல்வி அமைச்சின் 2020.12.03 திகதியிடப்பட்ட மற்றும் 37/2020 இலக்கம் கொண்ட சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல் கையேட்டின்படிஇ விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட பிள்ளைகளின் கல்வி வாய்ப்புகளைத் தீர்மானிப்பதற்கு சகல பிள்ளைகளும் கல்விக் கணிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாகும்.
  6. முறையான கல்விக் கணிப்பீட்டு வழிமுறைகளைக் கொண்டு பிள்ளைகளை இனங்காண்பதற்கும், அவர்களைப் பாடசாலைகளில் சேர்ப்பதற்கும், தனியாள் கற்றல் திட்டங்களுடன் அவர்களின் விருத்திக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் விசேட கல்விக் கணிப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்துவதற்காக, 33/2022 இலக்கம் கொண்ட 2022.09.08 திகதியிடப்பட்ட சுற்றறிக்கை மற்றும் அறிவுரைப்புக் கோவை வெளியிடப்பட்டது.

சர்வதேச அளவில் முன்வைக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் கட்டளைகள் (International laws and ordinances for inclusive education)

International laws for inclusive education

1. அடிப்படை மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights, 1948)

கட்டளை 26:

  • 26(1): எல்லோருக்கும் கல்வி உரிமை உள்ளது. குறைந்தது அடிப்படை மற்றும் அடிப்படை நிலை கல்வி இலவசமாகக் கிடைக்க வேண்டும்.
  • 26(2): கல்வியின் நோக்கம் மனித உணர்வுகளை வளர்த்தல், மற்றவரின் உரிமைகள் மற்றும் அடிப்படைக் காட்சிகளின் மதிப்பை வளர்த்தல் ஆகியவற்றாலாகும்.

2. குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை (Convention on the Rights of the Child, 1989)

கட்டளை 28:
அனைத்து குழந்தைகளுக்கும் சமமான தரமான கல்வி கிடைக்க வேண்டும். மாணவர்களுக்கு அடிப்படை கல்வி இலவசமாகக் கிடைக்க வேண்டும்.

கட்டளை 29:
கல்வியின் நோக்கம் குழந்தையின் முழுமையான ஆளுமையை வளர்த்தல், திறன்களை மேம்படுத்தல், மற்றும் உரிமைகள் மற்றும் அடிப்படைக் காட்சிகளின் மதிப்பை வளர்த்தல் ஆகும்.

3. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை (Convention on the Rights of Persons with Disabilities, 2006)

கட்டளை 24:

  • மாற்றுத்திறனாளிகள், பொதுவான கல்வி அமைப்பில் தங்களது உரிமைகளைப் பெற வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்றங்கள் (reasonable accommodation) செய்து, பின்தங்கிய பிள்ளைகளுக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும்.

4. சலமன்கா அறிக்கை (Salamanca Statement and Framework for Action, 1994)

  • கல்வி அனைவருக்கும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு சமமாகக் கிடைக்க வேண்டும்.
  • உள்ளடங்கல் கல்வி கொள்கைகள், மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

5. உலகளாவிய கல்வி கண்ணோட்டம் (Global Education Monitoring Report)

  • உள்ளடக்கல் கல்வியின் முன்னேற்றம் மற்றும் சவால்களைப் பற்றி ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடுகிறது.
  • ஒவ்வொரு நாட்டின் உள்ளடக்கல் கல்வி நிலைமைகள் மற்றும் அவற்றின் செயல்திறன் பற்றிய தரவுகளை வழங்குகிறது.

6. SAARC மாணவ வேலைத்திட்டம்

  • SAARC பகுதிகளில் உள்ளடக்கல் கல்வி முறைமைகளை உறுதி செய்யும் முயற்சிகளை மேற்கொள்கிறது.
  • ஒவ்வொரு நாட்டின் உள்ளடக்கல் கல்வி முன்னேற்றங்களை பகிர்ந்து கொண்டு, பன்னாட்டு அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள உதவுகிறது.

7. தெற்காசிய கூட்டமைப்பு (South Asian Association for Regional Cooperation, SAARC)

SAARC மாணவ வேலைத்திட்டம்:

  • SAARC பகுதிகளில் உள்ளாடக்கல் கல்வி முறைமைகளை உறுதி செய்வதற்கான திட்டங்களை செயல்படுத்துகிறது.
  • ஒவ்வொரு நாட்டின் உள்ளடக்கல் கல்வி முன்னேற்றங்களை பகிர்ந்து கொண்டு, பன்னாட்டு அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள உதவுகிறது.

8. உலக வங்கி (World Bank)

கல்வி எல்லோருக்கும் (Education for All, EFA)

  • அடிப்படை கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக நிதியுதவி, திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குகிறது.
  • உள்ளடக்கல் கல்வி குறித்து உலகளாவிய அளவில் செயல்திறன் மேம்படுத்த உதவுகிறது.

9. SDG 4 (Sustainable Development Goals)

  • 4.5: உள்ளடக்கல் மற்றும் சமத்துவமான கல்வி உறுதி செய்யும் முயற்சிகளை ஆதரிக்கிறது.
  • 4.6: அனைத்து ஆண்களும் பெண்களும் சமமான தரமான கல்வி மற்றும் கற்றல் வாய்ப்புகளை அடைய வேண்டும் என உறுதிப்படுத்துகிறது.

10. எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் (Reasonable Accommodation)

  • மாற்றுத்திறனாளிகள், பின்தங்கிய மாணவர்களுக்கு சமமாகக் கல்வி கிடைக்கின்றது என்பதை உறுதி செய்யும் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள்.

11. அறிக்கை மற்றும் மீளாய்வு (Reporting and Review Mechanisms)

  • சர்வதேச அமைப்புகள் அறிக்கைகள் மூலம் நாடுகளின் முன்னேற்றங்களைத் திரட்டுகின்றன.
  • சர்வதேச அளவில் உள்ளடக்கல் கல்வியின் முன்னேற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

12. தொழிலாளர் நிறுவனங்கள் (ILO – International Labour Organization)

  • முழுநேர வேலை மற்றும் பணியாளர் உரிமைகள்
  • மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிற்பயிற்சியை ஆதரிக்கின்றன.

இந்த சட்டங்கள் மற்றும் கட்டளைகள் அனைத்தும் உள்ளடக்கல் கல்வியை உலகளாவிய அளவில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். இவை அனைத்தும் ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான தரமான கல்வி கிடைக்க வழிவகுக்கின்றன.

1994 இல் வெளியிடப்பட்ட சலமன்கா அறிக்கையின் உண்மைகள் எவ்வாறு வெற்றிக்கு உதவுகின்றன.

உள்ளடங்கல் கல்வி

ஜூன் 1994 ல் ஸ்பெயின் நாட்டின் சலமன்காவில் விசேட தேவைகள் சார் கல்வி பற்றிய மாபெரும் உலக மாநாடு நடைபெற்றது. இம்மாநாடானது ஸ்பெயின் அரசு மற்றும் யுனெஸ்கோ நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது

“அனைத்து பிள்ளைகளுக்கும் சமனான உள்ளடங்கல் கல்வி வழங்குதற்கு அடிப்படை கல்விக் கொள்கையில் ஏற்படுத்தவேண்டிய மாற்றம்”

இம்மாநாட்டில் பிரதான கருப்பொருளாகும்.

அதாவது பாடசாலைகள் அனைத்துக் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக விசேட தேவைகள் சார் கல்வி தேவைப்படும் குழந்தைகள் ,மேல் கரிசனையுடன் செயல்பட வேண்டும்.

Salamanca அறிக்கையின் வலியுறுத்தப்பட்ட பிரதான அம்சங்கள்,

  • அனைத்து சிறுவர்களுக்கும் கல்வி ஒரு அடிப்படை உரிமையாகும். எனவே ஒவ்வொருவருக்கும் கட்டாயக்கல்வி அவசியம் என்பதுடன் அவர்களுக்கு கற்றலுக்கான வாய்ப்பு வழங்கப்பட்ட வேண்டும்.
  • ஒவ்வொரு குழந்தையும்தனித்துவமான நடத்தைகள்,விருப்பங்கள், இயல்புகள் மற்றும் கல்வி தேவைகளைக் கொண்டுள்ளனர்.
  • மேற்படி மாறுபட்ட பண்புகளுக்கும், தேவைப்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் கல்வித் திட்டங்கள் அமைக்கப்படல் வேண்டும்.
  • விசேட கல்வி தேவைகள் உடைய பிள்ளைகளின் தேவைகள் வழக்கமான பாடசாலை முறைமைகளினூடாகவே நிவர்த்தி செய்யப்படல் வேண்டும்.
  • அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலைகள் பயனுள்ள கல்வியை வழங்குவதுடன் கற்றலை செயல்திறன் மிக்கதாகவும் மற்றும் செலவு குறைந்ததாகவும் மேம்படுத்த வேண்டும்.

வெற்றியை உறுதி செய்யும் சலமன்கா அறிக்கையின் உண்மைகள்

  • காணக்கூடிய கொள்கைகள்:
    ஒவ்வொரு மாணவரின் தனித்துவத்தைக் கவனித்து, அவர்களின் தேவைகளுக்கேற்ப கல்வி முறைகளை வகுப்பது. மற்றும் மாற்றுத்திறனாளிகளும், மற்ற மாணவர்களும் சமமான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க ஆவண செய்தமை.
  • நடைமுறை விதிகள்:
    ஆசிரியர்களுக்கு உள்ளடக்கல் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி முழுமையாக விளக்கி, அவர்களுக்கு தேவையான திறன்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கல். பாடசாலைகளிலுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவையான ஆதரவு வேலைத்திட்டங்களை வழங்குதல்.
  • சமூக பங்கேற்பு:
    பெற்றோர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் பாடசாலை நடவடிக்கைகளில் பங்கு கொண்டு, மாணவர்களின் முன்னேற்றத்தை ஆதரிப்பதினை இவ்வறிக்கை முன்னிலைப்படுத்தியது. மேலும் கல்வி முறைகள் ஒவ்வொரு மாணவரின் பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது.
  • அரசியல் மற்றும் பொருளாதார ஆதரவு:
    உள்ளடக்கல் கல்வி முயற்சிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை அரசு உறுதி செய்ய வேண்டும் மேலும் அவற்றின் கல்வி கொள்கைகளை நியமன முறையில் செயல்படுத்துதல் வேண்டும் என வலியுறுத்துகிறது.

சலமன்கா அறிக்கையின் தாக்கங்கள்

  • சலமன்கா அறிக்கை பல நாடுகளில் உள்ளடக்கல் கல்வி கொள்கைகளைத் தங்கள் கல்வி முறைமைகளில் சேர்க்க உதவியது.
  • பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, பாடசாலைகளில் உள்ளடக்கல் கல்வியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த உதவியது.
  • மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வியில் சமமாகப் பங்கேற்க, மற்றும் சமூகத்தின் நெறிகள் மாற்றமடைய வழிசமைத்தது.

சலமன்கா அறிக்கை, உள்ளடக்கல் கல்வி மேம்பாட்டிற்கு ஒரு மையக் கட்டளையாக இருந்தது. இதன் நடைமுறை விதிகள், கோட்பாடுகள் மற்றும் கொள்கைகள், கல்வி முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, அனைத்து மாணவர்களுக்கும் சமத்துவமான கல்வி கிடைக்க வழிவகுத்தது.

Read more:

எமது WhatsApp குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.  

ஆரம்பப்பிரிவு  ( தரம் 01 – 05 ) குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.

https://chat.whatsapp.com/GUJDMcOOP1REj266FNVA6X

இடைநிலைப்பிரிவு ( தரம் 06 – A/L)  குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.

https://chat.whatsapp.com/CRxK1Zqu0XJ52hJYNGC6a

Sharing Is Caring:

Leave a Comment