கல்வி நவீனமயமாக்கல் மற்றும் கொள்கைகள் (2010 – 2026)
1) இலங்கையில் 13 வருட கட்டாயக் கல்வித் திட்டம் (13 Years Guaranteed Education Programme) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: 2017 (உயர்தரத்தில் தொழிற்கல்வித் துறையை அறிமுகப்படுத்துதல்).
‘2. அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ (Nearest School is the Best School) திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
விடை: 2016.
3. 2023/24 கல்விச் சீர்திருத்தத்தின்படி, தரம் 1 முதல் 12 வரை
அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய மதிப்பீட்டு முறை எது?
விடை: தொடர்ச்சியான மதிப்பீடு (Continuous Assessment) மற்றும் இறுதிப் பரீட்சை இரண்டையும் இணைத்த முறை.
4. STEM கல்வியில் இலங்கையின் புதிய இலக்கு யாது?
விடை: விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பாடங்களை ஒருங்கிணைத்தல்.
5. இலங்கையில் தேசிய கல்வி ஆணைக்குழு (National Education Commission) கடைசியாகப் பரிந்துரைத்த புதிய கல்விக் கொள்கை ஆவணம்
எது?
விடை: National Education Policy Framework (2023-2033)
6. 2010 இற்குப் பின் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட “மஹிந்தோதய
தொழில்நுட்ப பீடங்கள்” (Mahindodaya Tech Labs) எத்தனை பாடசாலைகளில்
நிறுவப்பட்டன?
விடை: சுமார் 1000 பாடசாலைகளில்.
7. இலங்கையில் “டிஜிட்டல் கற்றல்” (Digital Learning) முறைமையை
ஊக்குவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளம் எது?
விடை: e-Thaksalawa.
8. க.பொ.த உயர்தரத்தில் “தொழில்நுட்பப் பாடத்துறை” (Technology Stream)
எந்த ஆண்டு அறிமுகமானது?
விடை: 2013.
9. உயர்கல்விக்கான வட்டி இல்லா மாணவர் கடன் திட்டம் (Interest-Free
Student Loan) எந்த ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது?
விடை: 2017.
10. “Smart Classroom” திட்டம் இலங்கையில் பரவலாக எந்த ஆண்டிலிருந்து
முன்னெடுக்கப்பட்டது?
விடை: 2018/2019.
கல்வி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணிகள்
11. தேசிய கல்வி நிறுவனம் (NIE) அமைந்துள்ள இடம் எது?
விடை: மகரகம.
12. இலங்கையில் பாடப் புத்தகங்களை அச்சிட்டு விநியோகிக்கும் பொறுப்பு
யாருடையது?
விடை: கல்வி வெளியீட்டுத் திணைக்களம் (Educational Publications Department).
13. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) எந்தச் சட்டத்தின் கீழ்
நிறுவப்பட்டது?
விடை: 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகச் சட்டம்.
14. ஆசிரியர் கலாசாலைகளின் (Teachers’ Colleges) பிரதான பணி யாது?
விடை: பயிற்சியற்ற ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல்.
15. தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு (National Colleges of Education –
NCoE) மாணவர்களைத் தெரிவு செய்யும் அடிப்படைத் தகைமை என்ன?
விடை: க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு.
16. இலங்கையில் பரீட்சைகளை நடாத்துவதற்கும் பெறுபேறுகளை
வெளியிடுவதற்கும் பொறுப்பான நிறுவனம்?
விடை: இலங்கை பரீட்சைத் திணைக்களம் (NETS).
17. TVEC என்பதன் விரிவாக்கம் என்ன?
விடை: Tertiary and Vocational Education Commission (மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு).
18. NVQ (National Vocational Qualification) முறைமையில் எத்தனை
நிலைகள் (Levels) உள்ளன?
விடை: 7 நிலைகள்.
கல்வி உளவியல் மற்றும் கற்பித்தல் முறைகள்
19. “மாணவர் மையக் கற்றல்” (Student-Centered Learning) என்பதில்
ஆசிரியரின் பங்கு என்ன?
விடை: வசதியளிப்பவர் (Facilitator).
20. நவீன கற்றல் முறையில் 5E மாதிரி (5E Model) எவற்றைக் குறிக்கிறது?
விடை: Engage, Explore, Explain, Elaborate, Evaluate.
21. ஒரு குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில் அதிக செல்வாக்கு செலுத்துவது
எது?
விடை: பரம்பரை மற்றும் சூழல் (Nature and Nurture).
22. “கற்றல் ஊக்கம்” (Motivation) என்பதில் பரிசுகள் மற்றும் தண்டனைகள்
எவ்வகை ஊக்கத்தைச் சார்ந்தவை?
விடை: புற ஊக்கம் (Extrinsic Motivation).
23. விசேட தேவையுடைய மாணவர்களைச் சாதாரண மாணவர்களுடன்
இணைத்துக் கற்பிக்கும் முறை எவ்வாறு அழைக்கப்படும்?
விடை: உள்ளடக்கல் கல்வி (Inclusive Education).
இலங்கை புள்ளிவிவரங்கள் (கல்வி சார்ந்தவை – 2024/25 தரவுகள்)
24. இலங்கையின் தற்போதைய எழுத்தறிவு வீதம் (Literacy Rate) தோராயமாக
எவ்வளவு?
விடை: 92%
25. இலங்கையில் உள்ள மொத்த அரசாங்க பாடசாலைகளின் எண்ணிக்கை
எவ்வளவு?
விடை: 10,047 (2025 வருடாந்த பாடசாலை கணக்கெடுப்பு அறிக்கை)
26. இலங்கையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் மாணவர் விகிதாசாரம் (Primary)
என்ன?
விடை: 1:25.
27. இலங்கையில் உள்ள தேசிய பாடசாலைகளின் (National Schools)
எண்ணிக்கை அண்மைய தரவுகளின்படி எவ்வளவு?
விடை: 396
இலங்கை அரசியலமைப்பு மற்றும் புவியியல்
28. இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு எந்த ஆண்டு
அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: 1978.
29. அரசியலமைப்பின் 13வது திருத்தம் எதனோடு தொடர்புடையது?
விடை: மாகாண சபைகளை நிறுவுதல் மற்றும் அதிகாரப் பகிர்வு.
30. இலங்கையின் 21வது அரசியலமைப்பு திருத்தத்தின் முக்கிய நோக்கம்
என்ன?
விடை: ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்துதல்.
31. இலங்கையின் மிக நீண்ட ஆறு எது?
விடை: மகாவலி கங்கை (335 கி.மீ).
32. இலங்கையில் தென்மேற்குப் பருவக்காற்று நிலவும் காலப்பகுதி எது?
விடை: மே முதல் செப்டம்பர் வரை.
கல்விச் சட்டங்கள் மற்றும் கொள்கை மாற்றங்கள்
33. இலங்கையில் “கட்டாயக் கல்வி வயது” 5-14 லிருந்து 5-16 ஆக
உயர்த்தப்பட்ட ஆண்டு?
விடை: 2016.
34. 2024 புதிய கல்விச் சீர்திருத்தத்தின்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்
எதிர்பார்க்கப்படும் மாற்றம் என்ன?
விடை: போட்டித்தன்மையைக் குறைத்து, அடிப்படைத் தகைமைப் பரீட்சையாக மாற்றுதல்.
35. 1939 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்கக் கல்விச் சட்டத்தின் முக்கிய
நோக்கம்?
விடை: இலங்கையில் இலவசக் கல்விக்கான சட்ட ரீதியான அடித்தளத்தை இடுதல்.
36. 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்ட “ஆயிரம் இடைநிலை பாடசாலைகள்
திட்டம்;” (1000 Secondary School Project) திட்டத்தின் நோக்கம்?
விடை: நகர்ப்புற தேசியப் பாடசாலைகள் மீதான அழுத்தத்தைக் குறைத்து கிராமப்புற பாடசாலைகளில் தரமான விஞ்ஞான மற்றும் தொழிநுட்பக் கல்வியை வழங்குவதாகும்.
37. இலங்கையில் “தேசிய கல்வி ஆணைக்குழு” (NEC) எந்த ஆண்டு
நிறுவப்பட்டது?
விடை: 1991 (19 ஆம் இலக்கச் சட்டம்).
38. அண்மைய சீர்திருத்தங்களின்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை
எந்தத் தரத்தில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது?
விடை: தரம் 10 இல்.
39. “பாடசாலை மட்டக் கணிப்பீடு” (SBA) முதன்முதலில் அறிமுகமான ஆண்டு?
விடை: 1998 (2010 இற்குப் பின் இது நவீனப்படுத்தப்பட்டது).
40. 2023-2033 தேசிய கல்விக் கொள்கை(NEPF) மூலம் வெளியிடப்பட்ட
“இலங்கையின் கல்வி நவீனமயமாக்கல் செயற்திட்டம்” எதனை முதன்மையாகக்
கொண்டது?
விடை: டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் திறன் அடிப்படையிலான கல்வி (Competency-based).
41. இலங்கையில் இலவசப் பாடநூல் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட
ஆண்டு?
விடை: 1980.
42. இலவச சீருடை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
விடை: 1993.
கல்வி நவீனமயமாக்கல் திட்டங்கள் (2010 – 2026)
43. “E-Nanasa” கல்வித் தொலைக்காட்சித் திட்டம் எந்த நிறுவனத்துடன்
இணைந்து முன்னெடுக்கப்படுகிறது?
விடை: Dialog Axiata மற்றும் கல்வி அமைச்சு.
44. க.பொ.த (உ/த) தொழினுட்பப் பாடத்துறையில் உள்ள 3 பிரதான பாடங்கள்
எவை?
விடை: பொறியியல் தொழினுட்பம், உயிரியல் முறைமைகள் தொழினுட்பம்,
தொழினுட்பவியலுக்கான விஞ்ஞானம் (Science for Tech).
45. பாடசாலைகளுக்கு “தகவல் தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்களை” (ICT Hubs)
வழங்கும் திட்டம் பலப்படுத்தப்பட்ட ஆண்டு?
விடை: 2014-2015.
46. ஆசிரியர் வழிகாட்டி (Teachers’ Guide) நூல்களை வெளியிடும் பொறுப்பு
யாருடையது?
விடை: தேசிய கல்வி நிறுவகம் (NIE).
47. “Cloud-based Learning” இலங்கையில் பரவலாக அறிமுகமான காலம்?
விடை: 2020 (COVID-19 காலப்பகுதி).
48. 2024 முதல் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயற்கை
நுண்ணறிவு (AI) முன்னோடித் திட்டம் எத்தனை பாடசாலைகளில்
ஆரம்பிக்கப்பட்டது?
விடை: தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளைச் சேர்ந்த தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையான மாணவர்கள் மத்தியில்.
49. முன்பள்ளிக் கல்வி (Pre-School) தரப்படுத்துதல் சட்டம் எந்த ஆண்டு
கொண்டுவரப்பட்டது?
விடை: 2013 (தேசிய கொள்கை).
ஆசிரியர் சேவை மற்றும் ஒழுக்கக்கோவை
50. இலங்கை ஆசிரியர் சேவையின் (SLTS) தற்போதைய தரங்கள்; (Grades)
எத்தனை?
விடை: 3-II, 3-I(A), 3-1(B), 3-1(C), 2-II, 2-I, 1.
51. பாடசாலை வகைப்படுத்தலில் Type – II பாடசாலைகள் என்றால் என்ன?
விடை: தரம் 1 தொடக்கம் தரம் 11 வரை அல்லது தரம் 1 தொடக்கம் தரம் 9
வரையான வகுப்புக்களை கொண்ட பாடசாலை.
52. ஆசிரியர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் (Efficiency Bar)
பரீட்சையை நடாத்துவது யார்?
விடை: பரீட்சைத் திணைக்களம்.
53. இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக்குறிப்பு கடைசியாகத் திருத்தப்பட்ட
ஆண்டு?
விடை: 2014.
54. ஒரு ஆசிரியர் ஓய்வுபெறும் பொதுவான வயது எல்லை என்ன?
விடை: 60 வயது.
55. இலங்கையில் “தேசிய ஆசிரியர் தினம்” எப்போது கொண்டாடப்படுகிறது?
விடை: அக்டோபர் 6.
56. “ஆசிரியர் இடமாற்றக் கொள்கை” படி ஒரு பாடசாலையில் ஒரு ஆசிரியர்
அதிகபட்சம் எத்தனை ஆண்டுகள் பணியாற்றலாம்?
விடை: 8 ஆண்டுகள் (பொதுவாக 10 ஆண்டுகள் வரை நீடிக்கப்படலாம்).
57. இலங்கையில் ஆசிரியர் ஆலோசகர் சேவை (Teacher Advisor Service)
எப்போது முறைப்படுத்தப்பட்டது?
விடை: 2010 ஆம் ஆண்டின் பின்னர்.
சர்வதேச கல்விப் போக்குகள் மற்றும் இலங்கை
58. UNESCO வின் “கல்வி 2030” (Education 2030) இலக்கு எதனை
வலியுறுத்துகிறது?
விடை: அனைவருக்குமான சமமான மற்றும் தரமான கல்வி (SDG 4).
59. PISA (Programme for International Student Assessment) தரவரிசையில்
இலங்கை இணையத் திட்டமிட்டுள்ள ஆண்டு?
விடை: 2026.
60. “Life-long Education” (வாழ்நாள் கல்வி) என்பதன் பொருள் என்ன?
விடை: முறைசார், முறைசாரா வழிகளில் வாழ்நாள் முழுவதும் கற்றல்.
61. உலகளாவிய ரீதியில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கும் நாடு எது?
விடை: நோர்வே (அடிக்கடி தரவரிசை மாறும்).
52. STEM கல்வியில் ‘A’ (STEAM) சேர்க்கப்படுவதன் நோக்கம்?
விடை: Arts (கலைகள்) – படைப்பாற்றலை ஊக்குவிக்க.
கல்வி உளவியல் மற்றும் மாணவர் விருத்தி
53. “இயக்கநிலை ஊடாட்டம்” (Kinesthetic Learning) என்பது எவ்வகை
கற்றல்?
விடை: உடல் அசைவுகள் மற்றும் செயல்கள் மூலம் கற்றல்
54. “கற்றல் குறைபாடு” (Dyslexia) எதனோடு தொடர்புடையது?
விடை: வாசிப்பதில் ஏற்படும் சிரமம்.
55. கற்றலில் “முயன்று தவறி கற்றல்” (Trial and Error) கொள்கையை
முன்வைத்தவர்?
விடை: தோண்டைக் (Thorndike).
56. நவீன வகுப்பறையில் “Flipped Classroom” என்றால் என்ன?
விடை: மாணவர்கள் வீட்டிலேயே பாடங்களை (வீடியோ மூலம்) கற்றுவிட்டு,
வகுப்பறையில் பயிற்சிகளைச் செய்தல்.
57. “ஆக்கபூர்வமான கற்றல்” (Constructivism) கொள்கையின் தந்தை யார்?
விடை: ஜீன் பியாஜே (Jean Piaget).
கல்வி நிறுவனங்கள், கொள்கைகள் மற்றும் நவீனமயமாக்கல்
58. இலங்கையில் தற்போது இயங்கும் தேசிய கல்வியியல் கல்லூரிகளின் (NCOE)
எண்ணிக்கை எவ்வளவு?
விடை: 19.
59. தேசிய கல்வி ஆணைக்குழுவினால் (NEC) 2023 இல் வெளியிடப்பட்ட புதிய
கல்விக் கொள்கை சட்டகத்தின் பெயர் என்ன?
விடை: NEPF (National Education Policy Framework (2023-2033).
60. இலங்கையில் பாடநூல்கள் முதன்முதலில் இலவசமாக வழங்கப்பட்ட ஆண்டு
எது?
விடை: 1980 (இது 2010 இற்குப் பின் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது).
61. ‘மஹிந்தோதய ஆய்வுகூடங்கள்’ திட்டத்தின் கீழ் எத்தனை பாடசாலைகளுக்கு
ஆய்வுகூடங்கள் வழங்கப்பட்டன?
விடை: 1000 பாடசாலைகள் (2013 இல் ஆரம்பிக்கப்பட்டது).
62. பாடத்திட்ட வரைபு மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கான முதன்மை நிறுவனமான
தேசிய கல்வி நிறுவகம் (NIE) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
விடை: 1985 (மகரகமையில் அமைந்துள்ளது).
63. பரீட்சைத் திணைக்களத்தினால் (NETS) 2024 இல் அறிமுகமான புதிய
இணையவழிப் பெறுபேறு சான்றுப்படுத்தும் முறைமையின் பெயர் என்ன?
விடை: e-Verification.
64. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) “வட்டி இல்லா
மாணவர் கடன் திட்டம்” (Interest Free Student Loan) அறிமுகப்படுத்தப்பட்ட
ஆண்டு எது?
விடை: 2017.
65. 2016.04.20 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் 1963/30 ஆம்
இலக்கச் சுற்றறிக்கையின்படி இலங்கையில் கட்டாயக் கல்வி வயது எல்லை
என்ன?
விடை: 5 முதல் 16 வயது வரை.
66. தேசிய தொழிற்தகைமை (NVQ) முறைமையில் எத்தனை மட்டங்கள் (Levels)
காணப்படுகின்றன?
விடை: 7 மட்டங்கள் (Level 7 என்பது பட்டப்படிப்பிற்குச் சமமானது).
67. இலங்கையில் தொழினுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சித் துறையின் (TVET)
கீழ் இயங்கும் முக்கிய நிறுவனங்கள் எவை?
விடை: VTA, NAITA, DTET.
68. தேசிய கற்றல் முகாமைத்துவ தளமான ‘E-Thaksalawa’ எந்த ஆண்டு
அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: 2012.
69. இலங்கையில் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை (Smart Classroom) 2017 இல்
எங்கு ஆரம்பிக்கப்பட்டது?
விடை: ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மகா வித்தியாலயம்.
70. உயர்தரத்தில் எவ்வித நிபந்தனையுமின்றி தொழிற்சார் பாடங்களைக் கற்க
அனுமதிக்கும் ’13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வி’ திட்டம் எந்த ஆண்டு
ஆரம்பமானது?
விடை: 2017.
71. விஞ்ஞானம், தொழி;நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை
ஒருங்கிணைக்கும் ‘STEM கல்வி’ முறைமை இலங்கையில் எப்போது முதல்
வலுப்படுத்தப்பட்டது?
விடை: 2020 முதல்.
72. பல்கலைக்கழக நுழைவிற்காக புள்ளிவிவரவியல் ரீதியாக மதிப்பீடு செய்யும்
‘Z-Score’ முறை அறிமுகமான ஆண்டு எது?
விடை: 2001 (2020 இல் புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப திருத்தப்பட்டது).
73. இலங்கையில் ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் சேர்க்கை வீதம் யாது?
விடை: 98.62%
74. இலங்கையின் ஆசிரியர் சேவையில் உள்ள தர வரிசைகள் எவை?
விடை: 3-II, 3-I(a), 3-1(b), 3-1(c), 2-II, 2-I, 1.
75. ஆசிரியர் சேவையில் ஒரு தரத்திலிருந்து அடுத்த தரத்திற்குச் செல்ல பூர்த்தி
செய்யவேண்டிய பரீட்சை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை (Efficiency Bar – EB Exam).
76. ஒரு ஆசிரியருக்கு மாதமொன்றிற்கு அனுமதிக்கப்பட்ட குறுகிய கால
விடுமுறைகள் (Short Leave) எத்தனை?
விடை: 2 விடுமுறைகள்.
77. CPD (Continuous Professional Development)) என்பது எதனைக் குறிக்கும்?
விடை: ஆசிரியர்கள் பணியில் இருக்கும்போது பெறும் ‘தொடர்ச்சியான வாண்மை விருத்தி’ பயிற்சிகளைக் குறிக்கும்.
78. பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகளைத் தடை செய்யும் உயர்
நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்ட ஆண்டு எது?
விடை: 2021.
79. 2026 ஆம் ஆண்டுக்கான UNESCO உலகக் கல்வி மாநாட்டின் கருப்பொருள்
என்ன?
விடை: டிஜிட்டல் சமத்துவம் (Digital Equity).
80. ‘கற்றல் இழப்பு’ (Learning Loss) ஈடுசெய்யும் திட்டம் எதற்காக
ஆரம்பிக்கப்பட்டது?
விடை: கொவிட் பெருந்தொற்றினால் ஏற்பட்ட கல்விப் பாதிப்புகளை ஈடுசெய்ய 2022 இல் ஆரம்பிக்கப்பட்டது.
81. மாணவர்களின் புத்தகப் பை சுமையைக் குறைக்க பாடநூல்களைப்
பகுதிகளாகப் பிரிக்கும் திட்டம் எந்த ஆண்டு அறிமுகமானது?
விடை: 2024.
82. சமூக உணர்ச்சித் திறன்கள் (PRACTICE) என்றால் என்ன?
விடை: மாணவர்களிடையே சிக்கல் தீர்த்தல், மீள்திறன், சாதனை ஊக்கம்,
கட்டுப்பாடு, குழு வேலை, தன்னம்பிக்கை, முன்முயற்சி மற்றும் நெறிமுறைகள் (Problem solving, resilience, achievement, motivation, control, teamwork, confidence, initiative and ethics) ஆகிய திறன்களை வளர்த்தல்.
83. இலங்கையில் முன்பள்ளிக் கல்வியைத் தரப்படுத்துவதற்கான புதிய சட்டமூலம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?
விடை: 2024.
84. ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டம் எதனை நோக்கமாகக்
கொண்டு முன்னெடுக்கப்பட்டது?
விடை: 2016-2019 காலப்பகுதியில் பாடசாலைகளின் பௌதீக வளங்களை
மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
கல்விச் சீர்திருத்தங்கள், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம்
85. இலங்கையின் (NEPF – 2023-2033) தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பின் முக்கிய நோக்கம் யாது?
விடை: 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை ஒரு முன்னேறிய நாடாக மாற்றும் நோக்குடன் இது உருவாக்கப்பட்டது.
86. 2016 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி
மாணவர்களின் கல்வி வயது எல்லை யாது?
விடை: 5 முதல் 16 வயது வரை.
87. ’13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வி’ திட்டத்தின் (2017) சிறப்பு அம்சம்
என்ன?
விடை: க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும்
உயர்தரத்தில் தொழில்நுட்பப் பாடங்களைக் கற்க வழிசெய்தல்.
88. தற்போதைய ஆசிரியர் சேவைப் பிரமாணக்குறிப்பு எந்த வர்த்தமானி மூலம்
வெளியிடப்பட்டது?
விடை: 2014.10.23 அன்று வெளியிடப்பட்ட 1885/38 இலக்க அதிவிசேட வர்த்தமானி.
89. பாடசாலை வகைப்படுத்தலில் Type-111 பாடசாலைகள் என்றால் என்ன?
விடை: தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை அல்லது தரம் 1 தொடக்கம் தரம்
8வரையான வகுப்புகளை கொண்ட பாடசாலை.
90. 2024 தேசியக் கொள்கையின்படி ஆங்கில மொழிக் கல்வியை வலுப்படுத்த
மீள அறிமுகமான திட்டத்தின் பெயர் என்ன?
விடை: “English as a Life Skill” திட்டம்.
91. 2025 இல் முன்பிள்ளை பருவக் கல்விக்கான பாடத்திட்டக் கட்டமைப்பு
(National Curriculum framework) அறிமுகத்தினூடு பாலர் கல்வி தொடர்பான
தேசியக் கொள்கையை எந்த ஆண்டில் நடைமுறைப்படுத்த
உத்தேசிக்கப்பட்டுள்ளது?
விடை: 2027
92. மாணவர்களின் சுயகற்றலுக்காக 2012 இல் உருவாக்கப்பட்ட தேசிய கற்றல்
மேலாண்மை தளத்தின் (LMS) பெயர் என்ன?
விடை: E-Thaksalawa.
93. ESDP என்பதன் விரிவாக்கம் என்ன?
Education Sector Development Program – கல்வித்துறை அபிவிருத்தி
வேலைத்திட்டம்
94. உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப்லெட் கணினி வழங்கும்
“நெனோ” திட்டம் எப்போது ஆரம்பமானது?
விடை: 2019/20 காலப்பகுதியில்.
95. பரீட்சைத் திணைக்களம் இணைய வழியில் பெறுபேற்றுச் சான்றிதழ்களைச்
சரிபார்க்கும் (e-Certificate) வசதியை எப்போது வழங்கியது?
விடை: 2024 முதல்.
96. STEM – கல்வியியல் கல்லூரி ஆசிரியர் பயிற்சிகள் 2024 இல் எதனை
வலுப்படுத்த ஆரம்பிக்கப்பட்டன?
விடை: தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பாடங்களை வலுப்படுத்த.
97. 2020 இல் Z-Score கணக்கீட்டில் சீர்திருத்தம் செய்யப்பட்டதன் நோக்கம்
என்ன?
விடை: பழைய மற்றும் புதிய பாடத்திட்ட மாணவர்களுக்கிடையிலான பெறுபேற்றுச் சமநிலையைப் பேணுதல்.
98. 2010 இற்குப் பின் புதிதாக மருத்துவ பீடங்கள் ஆரம்பிக்கப்பட்ட
பல்கலைக்கழகங்கள் எவை?
விடை: ரஜரட்ட, சப்ரகமுவ, மொறட்டுவ மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்கள்.
99. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் (OUSL) 2014 முதல் தனது பிராந்திய
நிலையங்களை எத்தனையயாக அதிகரித்தது?
விடை: 28 நிலையங்கள்.
100. தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயில்வோர் பல்கலைக்கழகப் பட்டத்திற்குச்
சமமான NVQ Level 7 பட்டத் தகைமையைப் பெறும் வாய்ப்பு எப்போது
உறுதிப்படுத்தப்பட்டது?
விடை: 2013 முதல்.
101. பின்தங்கிய மாவட்ட மாணவர்களுக்காக ‘நகரப் பல்கலைக்கழக’ (City
University) மாதிரி முன்மொழியப்பட்ட ஆண்டு எது?
விடை: 2021.
102. தனியார் பல்கலைக்கழகங்களில் கற்பதற்காக அரசினால் 2017 இல்
அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டம் எது?
விடை: வட்டி இல்லா மாணவர் கடன் திட்டம்.
103. பாடசாலை மட்ட மேற்பார்வைக்காக 2010 இற்குப் பின் யாருடைய பங்கு
வலுப்படுத்தப்பட்டது?
விடை: ஆசிரிய ஆலோசகர்கள் (ISA).
104. SBA (பாடசாலை மட்டக் கணிப்பீடு) முறைமை எந்த ஆண்டில் மீளச்
சீரமைக்கப்பட்டது?
விடை: 2023.
105. பாடசாலைகளுக்குத் தன்னாதிக்க அதிகாரங்களை வழங்கும் முகாமைத்துவ
முறைமை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: SBM (School Based Management).
106. ஒரு ஆசிரியருக்கு வருடத்தில் அனுமதிக்கப்படும் மொத்த விடுமுறைகள்
(சமயோசிதம், மருத்துவம்) எத்தனை?
விடை: 41 விடுமுறைகள் (21 சமயோசிதம், 20 மருத்துவம்).
107. ஆசிரியர் சேவையில் பதவி உயர்வு பெறத் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயப்
பரீட்சை எது?
விடை: வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை (Efficiency Bar).
108. CPD (தொடர்ச்சியான வாண்மை விருத்தி) என்பது எதனைக் குறிக்கிறது?
விடை: ஆசிரியர்கள் சேவைக் காலத்தில் தொடர்ச்சியாகப் பயிற்சிகளைப்
பெறுவதை உறுதிப்படுத்தும் திட்டம்.
109. பாடசாலை வகைப்படுத்தலில் 1AB மற்றும் 1C பாடசாலைகளுக்கு
இடையிலான வேறுபாடு யாது?
விடை: க.பொ.த உயர்தரத்தில் கணித, விஞ்ஞான, கலை, வர்த்தகப்
பாடத்துறைகளுடன் மேலதிகமாக தொழில்நுட்பத் துறையையும் கொண்ட
பாடசாலைகள் 1AB பாடசாலைகளாகும். க.பொ.த உயர்தரத்தில் கலை, வர்த்தகம் ஆகியவற்றில் இரண்டும் அல்லது ஒரு துறையைக் கொண்ட பாடசாலைகள் 1C பாடசாலைகளாகும்.
110. கொவிட் கால கற்றல் இடைவெளியை நிரப்ப 2022-2024 காலப்பகுதியில்
நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?
விடை: “Catch-up Education” (கற்றல் இழப்பு ஈடுசெய்தல்) திட்டம்.
எமது சமீபத்திய பதிவுகள்:
- எமது பண்டைய தகவல்கள் – தரம் 4, 5
- 100 நுண்ணறிவு வினாக்கள் (100 IQ Questions) – தரம் 4, 5
- தரம் 4, 5 சுற்றாடல் கையேடு (124 வினாக்கள்)
- Grade 5 Model paper tamil medium – kandy zone
- தரம் 4 மாதிரி வினாத்தாள் 2025 (மட்டக்களப்பு வலயம்)
- தரம் 5 அறிவுத்தாரகை நுண்ணறிவு திறன் செயலட்டைகள் – 2026
- தரம் 5 தமிழ் , கணித செயலட்டைகள்
- தரம் 4, 5 நுண்ணறிவு திறன்சார் கைந்நூல்
- Grade 5 Scholarship model paper Tamil medium
- தரம் 5 புலமை ஒளி தமிழ் செயலட்டைகள் 2026
- தரம் 4, 5 தளவடிவங்கள், வரைபு மற்றும் விலைப்பட்டியல் பயிற்சி செயலட்டைகள்
- தரம் 4, 5 நாட்காட்டி, நீளமும் தூரமும் மற்றும் நேரம் பற்றிய பயிற்சி செயலட்டைகள்
- தரம் 4, 5 அறிவுறுத்தல்களை பின்பற்றுதல், தகவல்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் இரகசிய குறியீடுகள் பயிற்சி செயலட்டைகள்
- தரம் 5 நுண்ணறிவு பயிற்சி செயலட்டை – கதிரவன் வெளியீடு (2-5)
- எம்.ஏ.அபுதாஹிர் அவர்களின் முன்னோடி வினாத்தாள்கள் 2025
- தரம் 4, 5 காரணகாரியங்களை இனங்காணல், அவதானிப்பு மற்றும் உள்ளடக்க இடைத்தொடர்பு பயிற்சி செயலட்டைகள்
- தரம் 4, 5 எதிர்வுகூறல், மொழிபெயர்த்தல் மற்றும் புலக்காட்சி பயிற்சி செயலட்டைகள்
- தரம் 4, 5 கோலங்கள், பிரதியிடுதல் மற்றும் பொருள் உரைத்தல் பயிற்சி செயலட்டைகள்
- தரம் 4 செயலட்டை தொகுப்பு (27 செயலட்டைகள்)
- 14 நுண்ணறிவு திறன்களும் உள்ளடக்கிய செயலட்டைகள் – தரம் 4,5
- தரம் 6 விஞ்ஞானம் – விடுமுறைக் கால சுயகற்றல் கையேடு
- தரம் 2, 3 மேலதிக பயிற்சி செயலட்டைகள்
- Grade 2 Lesson Plan Tamil medium (தரம் 2 வேலைத்திட்டம்)
- Grade 3 Lesson Plan Tamil medium (தரம் 3 வேலைத்திட்டம்)
- Grade 4 Lesson Plan Tamil medium (தரம் 4 வேலைத்திட்டம்)
- Grade 5 Lesson Plan Tamil medium (தரம் 5 வேலைத்திட்டம்)
- Grade 5 English Self Learning Pack
- தரம் 2 மேலதிக பயிற்சி செயலட்டைகள்
- ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான வாக்கியம் அமைத்தல் பயிற்சிகள்
- வாக்கியங்களை வாசிப்போம் எழுதுவோம் – 2
- Grade 5 Second language Sinhala worksheets
- Grade 4 English Self Learning Activities
- தரம் 3 தமிழ்மொழி பயிற்சி கையேடு
- GRADE 3 ENGLISH SELF LEARNING ACTIVITIES
- தரம் 4 மாணவர்களுக்கான விசேட செயலட்டைத் தொகுப்பு (36 செயலட்டைகள்)
- தரம் 4 தமிழ்மொழி பயிற்சி கையேடு
- 450 கணித வினாக்கள் – தரம் 4
- தரம் 3 மூன்றாம் தவணை கற்றல் கையேடு
- தரம் 5 கல்வியகம் தமிழ் செயலட்டைகள் (1-5)
- முன்பள்ளி மற்றும் பாலர்நிலை பயிற்சிகள்
- ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான வாசிப்போம் எழுதுவோம் பயிற்சி செயலட்டைகள்
- தரம் 5 அறிவுத்தாரகை கருத்தரங்கு கையேடு
- தரம் 4, 5 புலமைப்பாதை தமிழ் செயலட்டைகள்
- ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான வாசிப்பு பயிற்சிகள்
- Grade 1 & 2 self learning worksheets (சுய கற்றல் பயிற்சிகள் தரம் 1, 2)
- அகரம் இலகு தமிழ் கையேடு பாகம் – 1
- ஆரம்பப்பிரிவு கதைப்பட அட்டைகளும் பயிற்சிகளும் Pdf
- ஆரம்பப் பிரிவுக்கான மெய் எழுத்துப் பயிற்சிகள்
- வாக்கியம் அமைத்தல் பயிற்சிகள்
- தரம் 1, 2 பரிகார வாசிப்பு கைந்நூல்
- 500 சுற்றாடல் வினா விடைகள் தரம் 4, 5
- ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான இலகு தமிழ் கையேடு
- 1000 கணித வினா விடைகள் – தரம் 5
- தரம் 4, 5 சுற்றாடல் அலகு வினாத்தாள்கள்
- 14 நுண்ணறிவு திறன்களும் உள்ளடக்கிய செயலட்டைகள் தரம் 4,5
- கல்வியகத்தின் தரம் 5 கணித செயலட்டைகள் (1-5)
- Grade 3 math’s Worksheets Pdf
- Grade 4 & 5, 200 ERA Questions
- Grade 4 math’s unit exam Papers (தரம் 4 கணித அலகுப் பரீட்சை வினாத்தாள்கள்)
- தரம் 3 நுண்ணறிவு செயலட்டைகள்
- இரண்டாம் தேசியமொழி – தரம் 3, 4, 5
எமது ஏனைய பதிவுகள்:
———————————————————————————————–
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
எமது WhatsApp குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.
ஆரம்பப்பிரிவு ( தரம் 01 – 05 ) குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.
https://chat.whatsapp.com/JRFhgktzI458hbPuHCnpta
இடைநிலைப்பிரிவு ( தரம் 06 – A/L) குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.
https://chat.whatsapp.com/CRxK1Zqu0XJ52hJYNGC6a
இப்பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால், உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு மறவாதீர்கள்.! மேலும் இது போன்ற பயனுள்ள விடயங்களுக்கு எம்முடன் தொடர்ந்து இணைந்திருங்கள். Please Share with Others ..!
